விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பி.திருவேங்கடபுரம் ஊராட்சியில் மேலபழையாபுரம் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து 25 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.

இதனை தொடர்ந்து பராமரிக்கப்படாததால் மேல்நிலைதொட்டி முழுவதும் சேதம் அடைந்துள்ளது. பிரதான சாலை மற்றும் கோவில் அருகில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் சேதமடைந்த மேல்நிலை தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)