விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கோட்டைப்பட்டி,, கொம்மங்கிபுரம், முத்தாண்டியாபுரம், சங்கரபாண்டியாபுரம், துலுக்கன்குறிச்சி, காக்கி வாடான்பட்டி, உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊரணிகள் மற்றும் கண்மாய்களுக்கு வரும் சாக்கடை கழிவுநீர் நேரடியாக செல்வதால் தண்ணீர் மாசடைகிறது.

அவ்வாறு தண்ணீர் மாசு அடைவதை தடுப்பதற்காக ஓடைப்பகுதியில் உறிஞ்சி குழிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. உறிஞ்சி குழிகளை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் உறிஞ்சி குழிகளில் நான் கணக்கில் தேங்கி துர்நாற்றம் மற்றும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி மொழிகளில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றவும் உறிஞ்சிகுழிகளை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்













; ?>)
; ?>)
; ?>)