காரைக்கால் வருகை தந்த புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா அவர்களை, காரைப் பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பின்போது, காரைக்கால் பகுதியில் பணிபுரிந்து, பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் ஓய்வூதிய (OAP) தொகை வழங்குவது சம்பந்தமாகவும், அங்கன்வாடி மையங்களில் கடந்த இரண்டு வருடங்களாக காய்கறி மற்றும் சிலிண்டர்களுக்கு செலவு செய்யப்பட்ட தொகைகளை வழங்க கோரியும் வலியுறுத்தப்பட்டது. மேலும், அங்கன்வாடி ஊழியர்களின் நிலுவைத் தொகை, கிராஜுட்டி, ஆறாவது ஊதியக்குழு நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்த இயக்குனர் அவர்கள், ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு OAP வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியாரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாகவும், காய்கறி மற்றும் சிலிண்டர் தொகைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் மற்றும் ஆறாவது ஊதியக்குழுவின் தொகை நிலுவை சம்பளம், கிரேஜிட்டி வழங்குவது தொடர்பாக நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது, காரைக்கால் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி ராஜேந்திரன், புதுச்சேரி குழந்தைகளை மேம்பாட்டு திட்ட அதிகாரி நிர்மலா, கண்காணிப்பாளர் வேல்முருகன், காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், புதுச்சேரி ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர் நலச்சங்க தலைவர் மண்ணாங்கட்டி,
அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவர் முத்துலட்சுமி, செயலாளர் அமலி சோபியா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் உடன் இருந்தனர்.