மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏவிடம் சோழவந்தான் போக்குவரத்து பணிமனை மேலாளர் முத்துராமன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ரூ 20 லட்சம் மதிப்பில் சிமெண்ட் தரை அமைத்து தர கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் அமிர்தராஜ் செயலாளர். பாலசுப்பிரமணியன் பொருளாளர் பாலமுருகன் உறுப்பினர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிமெண்ட் தரை அமைக்கும் பட்சத்தில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போக்குவரத்து பணியாளர்கள் பயன்பெறுவர் மழைக்காலங்களில் சேரும் சகதியமாக மாறுவது தவிர்க்கப்படும். ஆகையால் சட்டமன்ற உறுப்பினர் கருணை கூர்ந்து உடனடியாக சிமெண்ட் தரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.