• Thu. Apr 25th, 2024

வாழ்வாதார பிரச்சினைகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

மக்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று முதலமைச்சருக்கு மார்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மக்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். உள்ளாட்சிகளுக்கு கூடுதல் நிதி, அதிகாரம் வழங்க வேண்டும். வேலை உறுதி திட்டத்தை அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பஞ்சு, இரும்பு, தாமிரம், பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து சிறு, குறு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் வழங்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்க வேண்டும். முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அனைத்து உதவித் தொகைகளையும் ரூ.3 ஆயிரமாக உயர்த்திவழங்க வேண்டும். அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *