• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

குறிஞ்சி நகர் வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் குடியரசு தின விழா

Byஜெ.துரை

Jan 27, 2023

சென்னை ராமாபுரம் குறிஞ்சிநகரில்பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளுடன் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
சென்னை ராமாபுரத்தில் குறிஞ்சி நகர் வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் குடியரசு தின விழா வை முன்னிட்டு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளான சிலம்பாட்டம், நடனம்,பேச்சு போட்டி, கோல போட்டி, கயிறு இழுத்தல் மற்றும் கரகாட்ட சுரேஷ்ன் கரகாட்டம் போன்றவை நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, ராமாபுரம் காவல் உதவி ஆணையர் கௌதமன், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ், 154வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார்,155 வது வார்டு கவுன்சிலர் ராஜு ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இவ்விழாவில் நல சங்கத்தின் தலைவர் ராஜா, செயலாளர் சுப்பையா, பொருளாளர் ரவிசங்கர், ராமநாதன், நந்தகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர்.