விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் உற்பத்தி ஆகி வத்திராயிருப்பு, நத்தம்பட்டி, ம.புதுப்பட்டி, ஆனை கூட்டம் நீர்த்தேக்கம், ஆர். ஆர். நகர் வழியாக இருக்கண்குடி அணையில் சென்று கலக்கும் அர்ஜுனா நதி ம.புதுப்பட்டி அருகில் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ம. புதுப்பட்டி மற்றும் சுற்று கிராம பொதுமக்கள் மற்றும் பிரதான் தொண்டு நிறுவனத்துடன் ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்கலர் சார்பில் ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்தல் பணிகள் பூமி பூஜை உடன் தொடங்கப்பட்டது .

நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி பார்க்லர் தலைவர் ஞானப்பிரகாசம் மற்றும் சங்க உறுப்பினர்கள் பிரதான் தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதிநாராயணன் மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
