• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ராமநாதபுரத்தில் நிர்மலாசீதாராமன் சாலை பெயர் பலகை அகற்றம்..!

Byவிஷா

Dec 28, 2023

ராமநாதபுரம் மாவட்டம், லாந்தை கிராமத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட நிர்மலாசீதாராமன் சாலை பெயர்ப்பலகையை அதிகாரிகள் அகற்றியதால் அங்கு பதற்றம் நிலவியது.
இராமநாதபுரம் அருகே உள்ள லாந்தை கிராமத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு அனுமதி பெற்றுத் தந்ததற்கு நன்றிக் கடனாக லாந்தை கிராம சாலைக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயரில் நிர்மலா சீதாராமன் சாலை என்று பெயரிடப்பட்ட பெயர் பலகை நேற்று மாலை லாந்தை கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் ஊன்றப்பட்டது.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பெயர் பலகை வைப்பதற்கு உரிய அனுமதி இல்லாததால் இன்று மதியம் திடீரென அதிகாரிகளும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரிடப்பட்ட பெயர் பலகையை அகற்றினர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து தற்போது அந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.