• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

தேர்தலுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்..!

Byகாயத்ரி

Mar 1, 2022

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு பிப்.19 ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது.இந்நிலையில் சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது ஒட்டப்பட்ட 3,705 போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு போஸ்டர்களை அகற்ற வேட்பாளர்களிடம் இருந்து 2.67 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம், மாநகராட்சி சார்பாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது.