கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த பால்குளத்தில் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கருவேல முட்செடிகள், புல்புதர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த பால்குளத்தில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மாணவர்களின் விடுதியும் செயல்பட்டு வருகிறது.இக்கல்லூரியின் வளாகம் மற்றும் முன்புற பகுதிகளில் கருவேல முட்செடிகள், புல், புதர்கள், செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மிகவும் பாதிப்படைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம், தளவாய்சுந்தரம் எம்எல்ஏவிடம் இது குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அறிவுறுத்தலின் பேரில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் ஏற்பாட்டில் அரசு கலைக் கல்லூரியில் உள்ள கருவேல முட்செடிகள், புல்புதர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் கருவேல முட்செடிகள், புதர்களை அகற்றும் பணியை முத்துக்குமார் துவக்கி வைத்தார். அவரோடு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம், கல்லூரி முதல்வர் டாக்டர் டாரதி, அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் இராஜபாண்டியன், ஜே பேரவை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர் . கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் முட்செடிகள், புல்புதர்கள் அகற்றம்- அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி
