• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மதம் என்பது நம்பிக்கை, ஜாதி என்பது வெறி. மதத்தில் ஜாதிய அடையாளங்களை வெளிப்படுத்தினால் ஒழிக்கப்பட வேண்டும் – மகாராஜன் பேட்டி

Byகுமார்

Jul 3, 2024

தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளானால் உலகளவில் பேசப்படுகிறது. – பிற்படுத்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை. நேதாஜி சுபாஷ் சேனைத்தலைவர் என மகாராஜன் பேட்டியளித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா மருதகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவரை கடந்த ஜூலை 1 தேதி தாக்கியுள்ளார். அது குறித்து மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பத்திரிகையாளர் அலுவலகத்தில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்..,

திருநெல்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவரை மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களால் 1 தேதி தாக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். நாங்குநேரியில் பட்டியலின மாணவர் தாக்கப்பட்ட போது அரசும், அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும், திரைப்பட இயக்குனர்கள் போட்டி போட்டு உதவி செய்தனர். காவல்துறை சார்பில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான மாணவர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அரசும், அதிகாரிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. சமூக நீதி பேசும் அரசு இன்று பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை. வழங்கி அரசும், அதிகாரிகளும் உரிய உதவிகள் வழங்க வேண்டும்.

தாக்கிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 2 ஆண்டுகளாக அப்பகுதி மாணவர்கள் சமூக ரீதியாக பிரிந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள், காவல்துறையினரும் இணைந்து மாணவர்களிடையே எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே கோரிக்கை.

தொடர்ந்து சமூக வலைதளத்தில் ரீல்ஸ் போன்ற பதிவுகளால் இளைஞர்கள் மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற கேள்விக்கு.?

இன்றைக்கு 50 சதவீதம் சமூக விரோத செயலில் ஈடுபடுவதற்கு காரணம் சமூக வலைதளம் தான் காரணம். மேலும், குற்றப் பின்னணி உள்ளவர்கள், கொலை கொள்ளையடிப்பவர்கள் குறிப்பிட்ட சாதி ரீதியான பாடல்கள் வைத்து ரிலீஸ் வெளியிடுவது, பட்டா கத்தியுடன் ரீல்ஸ் வெளியிடுவது இன்றைக்கு அதிகரித்து பள்ளி மாணவர்களிடையே இது போன்ற ஜாதிய பிரிவுகள் ஏற்பட்டுள்ளது. இவற்றை தடுக்க அரசு நடவடிக்கை தகுந்த எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளானால் கவனத்தில் எடுத்துக் கொள்பவர்கள், பிற்படுத்தப்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டால் கண்டுகொள்வதில்லையா கேள்விக்கு.?

இன்றைக்கு பட்டியலினர் சமூகம் மக்கள் அல்லது மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அரசு முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் ஓடி சென்று உதவுகிறார்கள். அதை தேசியாளவில் உலகளவில் பேசப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. மற்ற சமூகம், படுத்தப்பட்ட அல்லது முற்படுத்தப்பட்ட சமூக சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் அதனை யாரும் கண்டு கொள்வதில்லை. அவர்கள் வாயில்லா பூச்சி போல இருக்கிறார்கள். உலக அளவில் இதை பேசப்பட்டால் மட்டுமே அவர்களுக்கான நியாயம் கிடைக்கும்.

ஜாதி ரீதியான கயிறு கட்டுவது குறித்த கேள்விக்கு.?

ஜாதி ரீதியான கயிறு கட்டுவதை தடைசெய்ய வேண்டும். பல பள்ளியில் இதனை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். திருநீர் இடுவது, புர்கா அணிவது ஆகியவை மதம் சார்ந்த நம்பிக்கையை அதை ஒழிக்க முடியாது. அவரவர்கள் நம்பிக்கை அவற்றை ஜாதி அடையாளங்களாக வெளிப்படுத்தினால் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும். மதம் என்பது நம்பிக்கை, ஜாதி என்பது வெறி. மதத்தில் ஜாதிய அடையாளங்களை வெளிப்படுத்தினால் ஒழிக்கப்பட வேண்டும்.

மதுரையில் முக்கியமாக திருப்பரங்குன்றம் பகுதியில் மிகக் கடுமையான அளவில் வந்துவிட்டு பிரச்சனை அதிகரித்துள்ளது பட்டியலின பெண்களை முன்னிறுத்தி கந்து வட்டி கொடுத்து அதிக வட்டிகளை வாங்குவது அதிகரித்திருப்பதாகவும் கந்துவட்டி வாங்க சொல்லி நிர்பந்திப்பதாகவும் காவல்துறையிடம் மனு கொடுக்க சென்ற பெண்களை திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி கந்து வட்டிக்காரர்களை வரவழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை கட்ட சொல்லி மிரட்டி எழுதி வாங்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களும் குற்றம் சாட்டியுள்ளனர். கந்து வட்டி தொடர்பாக புகார் அளிக்க சென்றால் புகாரை ஏற்காமல் காவல் ஆய்வாளர் கந்துவட்டி வசூல் செய்து கொடுத்திருக்கிறார்கள்.