• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

நிவாரணம் வழங்கியது அரசியல் அல்ல உதவி..,

ByKalamegam Viswanathan

May 28, 2025

அண்ணா பல்கலை பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிபதி வழங்கக்கூடிய தீர்ப்பு அவருக்கான நீதியாக இருக்க வேண்டும் தீர்ப்பாக இருக்கக் கூடாது.

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் அதே நேரத்தில் ஆடு,மாடு மாநாடுகள் வைத்திருக்கிறேன். அதில் கலந்து கொள்வேன் சீமான் பேட்டி

பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக நிர்வாகிகள் நிவாரணம் வழங்கியது உதவி அரசியல் அல்ல காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைத்திருந்தா இப்படி பேசி இருப்பாரா?

சிவகங்கை,காரைக்குடி, விருதுநகர் பகுதியில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குறைந்தபட்ச தண்டனை கொடுக்குமாறு ஞானசேகரன் தரப்பு கூறியது குறித்த கேள்விக்கு,

தீர்ப்பை முன்கூட்டியே கணிக்க முடியாது குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாரும் தண்டனையை குறைக்க சொல்லி கேட்பது இயல்புதான் குற்றம் சாட்டப்பட்டவர் தனது குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டும் அப்பா,தங்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கும் குடும்பம் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிபதி வழங்கக்கூடிய தீர்ப்பு என்பது அவருக்கான நீதியாக இருக்க வேண்டும் தீர்ப்பாக இருக்கக் கூடாது என பேசினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அரசு போக்குவரத்துக் கழகமாக பெயர் மாற்றம் செய்யப்படுவதாக வெளிவந்த செய்தி குறித்து கேள்விக்கு:

தமிழ்நாடு அரசு என்று சொல்வதற்கே அவ்வளவு அவமானமாக உள்ளது.

தமிழ்நாடு அரசு என்று சொல்வதற்கு பதிலாக அரசு என்று சொல்கிறார்கள் அது எந்த அரசு என்றால் கர்நாடக அரசா? கேரளா அரசா? என கேள்வி எழுப்பிய சீமான் வரவேற்பு பலகலைகளில் ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள் அதை ஏன் தமிழில் எழுத கூடாது.

எதில் அக்கறை செலுத்துகிறார்கள் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு ஆண்டுதோறும் செல்கிறோம் அந்தப் பாதைகளில் மரக்கன்றுகள் ஏதும் வைத்துள்ளார்களா? கொடி கம்பங்களை தான் நட்டு வைக்கிறார்கள் என்றார்.

சென்னை அருகே நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர் இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு:

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் என்ன அரசியல் செய்யப் போகிறார்கள்.தமிழக வெற்றிக்கழகத்தின் பெண் பிள்ளைகள் நிர்வாகிகள் உதவும் போது அதை தடுத்து நிறுத்தி வயிற்றில் மிதிக்கும் அளவுக்கு என்ன குற்றம் தேச துரோகம் ஆகிவிட்டதா? முதலில் இந்த தலைவர்கள் அரசியல் ஆக்கறாங்க அரசியல் பேசுறாங்க என்று பேசும் தலைவர்கள் எது அரசியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டால் நாங்கள் அதை மட்டும் பேசி விட்டு செல்கிறோம்.

எதுதான் அரசியல் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டது மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசினால் அரசியல் என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியது அரசியல் அல்ல உதவி என்றார்.

எல்லாவற்றிலும் தர்மத்தை கடைபிடிப்பவர்கள் கூட்டணியில் மட்டும் தர்மம் வாழ்கிறது.கூட்டணி தர்மத்திற்காக இது போன்று பேசுகிறது மனசாட்சியுடன் செல்வ பெருந்தகை பேசுகிறாரா?காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி .வைத்திருந்தால் இப்படி பேசுவாரா?

கல்விக்கு நீதி கொடுக்கவில்லை என தமிழக முதல்வர் குற்றம் சாட்டையை குறித்து கேள்விக்கு:

மோடியை சந்தித்து மாட்டு வியாபாரி போல் கை குலுக்கி பேசிய போது நிதி பற்றி பேச வேண்டியது தானே. மூன்று நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்து விட்டு இப்போது செல்கிறார்.நீதி கொடுக்கவில்லை என்றால் எதற்காக வரி செலுத்துகிறீர்கள் வரி செலுத்தாமல் நிறுத்தினால் மறுபடியும் ed வரும்.நூலகம் நினைவிடம் சிலைகள் கட்டுவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வருகிறது அவர்களது சொத்தை விட்டு கட்டுகிறார்களா என சீமான் கேள்வி எழுப்பினார்.

ஜூன் 22 ஆம் தேதி மதுரை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் என்ற கேள்விக்கு:

அழைப்பு கொடுப்பார்கள் அந்த நேரத்தில் எனக்கு வேறு போராட்டம் உள்ளது. ஆடு மாடுகளின் மாநாடு மதுரையில் வைத்திருக்கிறேன் அதில் கலந்து கொள்வேன் என்றார்.

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழக வருகையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு:

பிஜேபியுடன் கூட்டணி வைத்திருப்பதால் அவரை பாஜகவினர் தமிழகத்திற்கு அழைத்திருக்கலாம். அதை நான் பேச வேண்டியது இல்லை என்ற சீமானிடம் தமிழகத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதை ஜனா சேனா தீர்த்து வைக்கும் என பவன் கல்யாண் கூறியடுத்த கேள்விக்கு என்ன பிரச்சனையை தீர்த்து வைக்கப் போகிறார். பிரச்சனையை அவர்கள் தான் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக எத்தனை பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது.

தமிழகத்தில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம் என தமிழக முதல்வர் கூறியுள்ளார் ஒரு லட்சம் பிரச்சனைகளை தீர்த்து வைத்தேன் என்று கூறியிருந்தால் பரவாயில்லை ஒரு லட்சம் போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளோம் என்று கூறினால் அதுநல்லாட்சி என்று சொன்னால் வெட்கமாக இல்லையா? என்றார்.10 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு நல்லாட்சி, வளர்ச்சி என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வது.

தமிழகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளது என்று கூறுகிறீர்கள். ஆனால்
2026ல் திமுக ஆட்சியமைக்கும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பு குறித்து கேள்விக்கு:

விரும்புகிறார்கள் உங்களுக்கு தெரிகிறது. இவ்வளவு பிரச்சினைகள் உள்ளது என்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வர விரும்பினால் ஓட்டை அவர்களுக்கு போடுங்கள் தர வேண்டாம் என்றால் வேறொருவருக்கு போடுங்கள் என்றார்.