• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் 166 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் நீதிமன்ற வளாகம் கட்ட ஒப்பந்த புள்ளி வெளியீடு.!!

ByKalamegam Viswanathan

Jun 8, 2023

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மாவட்டமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவதால் இட நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில்,மாவட்ட நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக நீதிமன்றம் கட்டப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தலைமை நீதிபதி முன்னிலையில் அதற்கான அடிக்கல் நாட்டும் பணியானது மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு நடைபெற்றது

இந்நிலையில் கட்டுமான பணிக்கான ஒப்பந்த புள்ளியை பொதுப்பணித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது

அதில் சுமார் 166 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று அடுக்குகளாக தரைதளத்தில் சுமார் 157 கார் மற்றும் 203 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,இதில் 18 நீதிமன்ற இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..