• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4000 கன உபரி நீர் திறப்பு. திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை.

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் நள்ளிரவு ஒரே நாளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகமாகி அணையில் இருந்து ஆற்றின் வழியாக வினாடிக்கு 4000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது .

வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான  மேகமலை, வருசநாடு, குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு கன மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு ஒரே நாளில் 2700 கன அடி உயர்ந்து, 4000 கனஅடியாக நீர்வரத்து இருந்தது எனவே அணையின் பாதுகாப்பு கருதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக அபாய சங்கு ஒழிக்கப்பட்டு உவரி நீர் ஆற்றின் வழியாக திறக்கப்பட்டது. கரையோரத்தில் குடியிருக்க கூடிய மக்கள் ஆற்றை கடக்கவும், ஆற்றில் நீராடவோ, வேற எந்த காரணத்திற்காகவும் கரைப்பகுதியில் செல்ல வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.