• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை கடற்படையால் கடந்த மாதம் 7ம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை விடுவித்து இலங்கையின் ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
படகு தொடர்பாக வரும் 28ம் தேதி நீதிமன்றத்துக்கு வந்து வழக்கை நடத்தலாம் எனவும் தீர்ப்பு அளித்துள்ளத. பிப்ரவரி 7-ம் தேதி கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் 3 படகுகளுடன் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அப்பகுதிக்கு ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தனர். 11 மீனவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இலங்கையின் ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.