• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆசிரியர் பணியிடங்களில் வயது உச்சவரம்பில் தளர்வு

Byவிஷா

Feb 26, 2024

தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்களுக்கான வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 58வயது வரை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது..,
ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வயது தளர்வு குறித்து சிறுபான்மையினர் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அரசாணையில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.