புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுக்கா, தேராவூர் மேட்டுப்பட்டி கிராமத்திலிருந்து பிரசவ வலி என இன்று 10.09.2026 அதிகாலை 3:10 மணிக்கு 108 – க்கு அழைப்பு வந்தது. பின் இலுப்பூர் GH ஆம்புலன்ஸ் தேராவூர்க்கு விரைந்து சென்று சுகன்யா ( சக்திவேல் )வயது 26 என்ற பெண்மணியை ஏற்றிகொண்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தேவ பாஸ்கரன் ஆம்புலன்ஸை நெடுங்காடு அருகே ஓரமாக நிறுத்தினார்.

அந்தப் பெண்மணிக்கு ஆம்புலன்ஸிலேயே அவசர கால மருத்துவ நுட்புனர் பூபதி ராஜா அவர்கள் பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார்.அந்த பெண்மணிக்கு அதிகாலை 3:38 மணி அளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின் மருத்துவ சிகிச்சை அளித்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு தாய், சேய் இருவரும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்….

இந்த பணியை சிறப்பாக செய்த ஓட்டுநர் தேவ பாஸ்கரன் மற்றும் மருத்துவ நுட்புனர் பூபதி ராஜா ஆகிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு அவரது உறவினர்கள் மற்றும் தேராவூர் மேட்டுப்பட்டி பகுதி பொதுமக்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்..








