• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை நிகழ்ச்சி….

ByG. Anbalagan

Feb 8, 2025

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் முன்பாக பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் மழை பாங்கான மாவட்டம் மட்டுமில்லாத ஆண்டுதோறும் பருவமழையால் பல பெரிய பேரிடர்கள் ஏற்படக்கூடிய மாவட்டமாக உள்ளது எப்படி பேரிடர் நடக்கும் சமயங்களில் சென்னை காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழக பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பேரிடர் காலங்களில் பணிபுரிந்து பல உயிர்களை காப்பாற்றி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து மாவட்டத்தில் பேரிடர் தடுக்கும் வகையில் தமிழக பேரிடர் மீட்பு குழுவினரின் ஒரு குழுவானது உதகையில் நிரந்தரமாக தங்கி பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் முன்பாக பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவிய இயக்குனர் மணிமாறன் தெரிவிக்கையில்..,

நீலகிரி மாவட்டம் பேரிடர் அதிகம் நடைபெறும் மாவட்டம் என்பதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 20 பேர் கொண்ட குழு தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நிரந்தரமாக தங்கி பேரிடர் சமயங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் அதிநவீன இயந்திரங்களை கையாள்வது குறித்து தினந்தோறும் பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக எதிர்காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் பேரிடர் சமயங்களில் குழுவினர் உடனடியாக சென்று உயிர் சேதங்கள் மற்றும் பொருட்சேதங்களை தடுக்கும் வகையில் பணிபுரிவர் என்று கூறினார்.