• Tue. Apr 30th, 2024

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக, எக்ஸ்தலத்தில் பதிவு செய்த விவகாரம்…

ByKalamegam Viswanathan

Oct 20, 2023

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன். அர்ஜுன் சம்பத்திற்கு பதிலாக அவரது வக்கீல் நேரில் ஆஜர்.

மதுரை விக்ரமங்கலம் அருகே கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவரது வீட்டில் இருசக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சொத்து தகராறில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது சம்பந்தமாக இந்து மக்கள் கட்சி தலைவர் ‌அர்ஜூன் சம்பத் அதனை சட்டம் ஒழுங்கு பிரச்சனை போல எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார். இது தொடர்பான விசாரணைக்கு வரும்படி செக்கானூரணி காவல் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்பி வைத்தனர். அதன் அடிப்படையில் அவருக்கு பதில் அவரது வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் செய்தி யாளர்களிடம்பேசியதாவது,

மதுரை விக்கிரமங்கலம் அருகே கீழப்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தகராரு காரணமாக ஒரு தரப்பினர் பெட்ரோல் குண்டுகளை வீட்டில் வீசிவிட்டு சென்றதில் இருசக்கர வாகனங்கள் எரிந்து தீக்கரையானது. அதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் சுமதி என்பவர் காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த செய்தியானது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. அதன் அடிப்படையில் வெடிகுண்டு கலாச்சாரம் தமிழகத்தில் பரவி விட்டதாக எனது கட்சிக்காரர் அர்ஜுன் சம்பத் x தளத்தில் பதிவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் சம்மன் ஆனது இரவோடு இரவாக கொடுக்கப்பட்டது. அந்த சம்மன் அவர் கைக்கு கிடைத்த அரை மணி நேரத்திற்குள் எல்லா டிவியிலும் பிளாஷ் நியூஸ் ஆக வருகிறது. ஆகவே இதன் உள் அர்த்தம் என்ன? ஒரு மனிதரை டார்கெட் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் என்ற உள்ளர்த்தம் இருப்பதினால் தான் உடனடியாக பிளாஷ் நியூஸ் ஆக வருகிறது.

சம்மன் கிடைத்த போது அவரும் வெளிவிடவில்லை எங்கள் கட்சியை சார்ந்த யாரும் வெளியிடவில்லை எப்படி வெளியில் வந்தது. நவம்பர் 1 தேதி நடைபெற இருக்கின்ற திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கின்றார். அதனை நிறுத்த வேண்டும், முடக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு சதி நடந்திருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *