• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அகதிகளை ஏற்றிச்சென்ற டிரக் விபத்து-53 பேர் உயிரிழப்பு

Byகாயத்ரி

Dec 10, 2021

மெக்ஸிகோவில் அகதிகளை ஏற்றிச்சென்ற டிரக் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 53 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்காவிலிருந்து 100-க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த டிரக் மெக்ஸிகோ நாட்டின் சியாபாஸ் மாகாணத்தின் புறநகர் பகுதியில் நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஆபத்தான வளைவில் டிரக் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 53 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 40- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை டிரக்கில் ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.