• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆலங்குளத்தில் சமரச தீர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

Byவிஷா

Apr 13, 2023

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் சட்டப்பணிக்குழு சார்பில் சமரச தீர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆலங்குளம் பஸ்நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஆனந்த வள்ளி தலைமை தாங்கினார். வக்கீல் சங்க செயலர் நெல்சன் முன்னிலை வகித்தார். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள பயணிகளிடையே சட்ட சமரச தீர்வு மையம் குறித்து விளக்கமளிக்கப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. முன்னதாக முத்தாரம்மன் கோவில் திடலில் இருந்து பஸ் நிலையம் வரை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி, வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் வக்கீல்கள் பால்ராஜ், சந்திரபோஸ், சிவகுமார், சார்லஸ், இளங்கோ, ரமேஷ் , ஜெயசீலன் , சேர்மராஜ், திருமலைகுமார் மற்றும் நீதி மன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். வழக்குரைஞர் சங்க முன்னாள் செயலர் சாந்தகுமார் வரவேற்றார். சங்க பொருளாளர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.