• Sat. Apr 27th, 2024

அப்படியா.! ஊட்டியில் இப்படியொரு இடமா..!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் என்றவுடன், எப்போதும் நம் நினைவுக்கு வருவது
புனித ஜார்ஜ் கோட்டைதான்.

ஆனால், தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்கள் புனித ஜார்ஜ் கோட்டை சட்டப்பேரவைக் கூடத்தில் மட்டுமல்லாமல், மேலும் ஆறு இடங்களில் நடைபெற்றுள்ளன. அதில் குறிப்பாக குளு குளு நகரமான ஊட்டியில், தற்போது தமிழகம் மாளிகை என்றழைக்கப்படும் அரன்மொர் அரண்மனையில் தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் ஒரு பகுதியாக 1959 ஏப்ரல் 20ந் தேதி -முதல் 30ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெற்றது. இதில் 180 எம்.எல்.ஏ., பங்கேற்றனர்.

இந்த அரண்மனை, ஜோத்பூர் மகாராஜா வம்சத்தினரால் கட்டப்பட்டது. தற்போது இங்குள்ள பூங்காக்கள் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது. ‘தமிழக விருந்தினர் இல்ல’மாக உள்ளது. இதற்க்கென தனி தாசில்தார் நியமிக்கபட்டு அவருடைய
கண்கானிப்பில் செயல்பட்டு வருகிறது.

இந்த தமிழகம் மாளிகையில் பல வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் நடந்துள்ளன. நேரு தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு இங்கு நடந்துள்ளது. இதனைதொடர்ந்து அரண்மூர் அரண்மனையை காமராஜர் 5 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி அரசுடைமையாக்கபட்டது. அதன் பிறகு தி.மு.க., ஆட்சியில் அண்ணாதுரை முதல்வராக பொறுபேற்றவுடன் அரண்மூர் அரண்மனை தமிழகம் மாளிகை என்ற பெயர் மாற்றம் செய்யபட்டது.

தமிழகம் மாளிகையில் குயின் பங்களா என்கிற இடம் 15 அடி பூமிக்கு அடியில் அமைக்கபட்டுள்ளது. அங்கு செல்ல சுரங்க பாதை உள்ளது. மேலும் ஜன்னல், கதவுகளில் வியக்கதக்க வண்ணமிகு கலை நயத்துடன் வேலைப்பாடுகள் செய்யபட்டுள்ளது.

அன்பே வா, சாந்தி நிலையம், நாட்டாமை, உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழி திரைப்படங்கள் தமிழகம் மாளிகையில் படமாக்கபட்டவையே.

நீலகிரி மாவட்டத்தில் இது போன்ற பழமையும் பாரம்பரியமும் மிக்க கட்டிடங்கள், பங்களாக்கள்
இருந்து வரும் நிலையில் அவைகளை அரசு பராமரித்து பாதுகாத்தால் எதிர்கால தலைமுறையினருக்கு வரலாற்று பொக்கிஷமாக விளங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *