ஆல்யா-சஞ்சீவ் ஜோடிக்கு அறிமுகமே தேவையில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான நாடகம் ஒன்றில் இணைந்து நடித்த இருவருக்கும் காதல் மலர்ந்தது! நம்ம வீட்டு ஜோடியாக தமிழ் மக்கள் கொண்டாடிய இந்த இணையருக்கு ஒரு கியூட் பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். தற்போது ஆல்யா இரண்டாம் முறை கர்ப்பமாக உள்ளார்!
ராஜா ராணி-2 டார்லிங்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும், ஷ்ரேயா-சித்து ஜோடி ரசிகர்களின் பேவரைட். இவர்கள் காதலித்து சமீபத்தில் திருமணமும் செய்துக்கொண்டனர்.
நட்சத்திரா- ராகவ் ஜோடி சமீபத்தில் தன் காதலனைக் கரம் பிடித்திருக்கிறார் நட்சத்திரா.
சீரியல் ஆக்டர், டான்சர், சினிமா ஆர்ட்டிஸ்ட் என பல முகங்கள் கொண்ட ஆனந்திக்கு அஜய் உடன் நடந்தது அரேஞ்ச்ட் மேரேஜ் தான். ஆனால் கல்யாணத்துக்கு பிறகு காதலிக்கும் தம்பதி இவர்கள். இருவருக்கும் இடையே இதுவரை சண்டையே வந்ததில்லை என்பது கூடுதல் கருத்து!
“ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்றதுதான் எங்களோட கல்யாண மோட்டோ” என்கிற யூ-ட்யூப்பர்ஸ் திருவும் ஹரிஜாவும் 2k கிட்ஸ்களின் பேவரைட்டான லவ் ஜோடி.
நீலக்குயில் சீரியலின் ஹீரோ சத்யாவும் பாடகி NSK ரம்யாவும் பார்த்துக் கொண்டது ஒரு டிவி நிகழ்ச்சியில். தேவதைக் கதைகளுக்கு சற்றும் குறைந்ததில்லை இவர்களின் காதலும் கல்யாணமும்.
செம்பருத்தி ஷபானா – பாக்கியலட்சுமி சீரியல் ஆக்டர் ஆர்யன் இருவருக்கும் ரசிகர் பட்டாளம் அதிகம். ரியல் லைஃபில் எப்போதும் சந்தோசமாக இருக்க வாழ்த்துகள் ஜோடிஸ்!






