• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையம் : புதிய திட்டம் முன்னெடுப்பு

Byவிஷா

Feb 16, 2024

மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் ஒரு புதிய முன்னெடுப்பாக, சென்னை மாநகராட்சி சார்பில் பூங்காக்களில் புத்தக வாசிப்பு அமைக்க திட்டமிட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன் இருப்பதால் முழு வேலையும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கி கிடக்கிறார்கள். இதனால் புத்தகங்கள் வாசித்தல் போன்ற நல்ல பழக்கங்கள் குறைந்து வருகிறது என்றே சொல்லலாம் .இதனால் மாணவர்கள் மற்றும் மக்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்கு சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அதாவது சென்னை மாநகராட்சி சார்பில் பூங்காக்களில் வாசிப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக மே தின பூங்காவில் வாசிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காக்களில் நேரம் செலவிடுபவர்கள் இங்கிருந்து புத்தகங்களை எடுத்து படிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் புத்தகங்களை நன்கொடையாகவும் இங்கே வழங்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.