• Fri. Mar 29th, 2024

மீண்டும் வெளியான ஆடியோ..! அதிமுகவில் என்ன நடக்கிறது? செல்லூர் ராஜூ விளக்கம்…

தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் வருவதை முன்னிட்டு அதிமுக கட்சியினரிடையே கலகத்தை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த ஆடியோ வெளியாகி உள்ளது என்று மதுரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி…

சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆடியோ…அது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார். அந்த ஆடியோ பதிவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஒருமையில் பேசியதும், சசிகலாவுக்கு ஆதரவாக நிலைமை மாறும் அதற்கான பணி நடைபெற்று வருவதாக கூறியதும் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.

சசிகலா ஆதரவாளரான சக்திவேல் ராஜன் என்பவர் தற்போது குவைத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சசிகலாவுக்கு ஆதரவாக தென் மண்டல நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களை தொடர்பு கொண்டு அலைபேசியில் பேசி அதன் ஆடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அன்வர் ராஜாவுடன் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது செல்லூர் ராஜுவுடன் பேசிய ஆடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில் மதுரையின் அதிமுக முகமாக இருக்கும் நீங்கள் சசிகலாவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமா என சக்திவேல் ராஜன் கோரிக்கை வைக்க அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக செல்லூர் ராஜு பேசியுள்ளார். அத்துடன் மதுரையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில் சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவில் உள்ள குரல் நான் இல்லை எனக்கும் அந்த ஆடியோ க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கியுள்ளார்.

அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் உங்களுடைய வளர்ச்சி பிடிக்காத சில சமூக விரோதிகளால் இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமையில் கலந்தாலோசித்த பிறகு காவல் துறையில் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறேன்.தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் வருவதை முன்னிட்டு கட்சியினரிடையே கலகத்தை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுகவின் வளர்ச்சி பிடிக்காத சமூக விரோதிகளால் பரப்பப்படுகிறது. சசிகலா விவகாரத்தில் உங்களையே குறிவைத்து தாக்குதல் நடத்த என்ன காரணம் என்ற கேட்டதற்கு ஊடக மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளதால் இது போன்ற பொய்ப் பிரச்சாரத்தை பரப்பி விடலாம் என சமூக விரோதிகள் முயற்சி செய்யலாம் என்னை வைத்து கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. சசிகலா வருகையின் குறித்து தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *