• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை

Byமதி

Dec 20, 2021

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 14 இடங்களில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கலில் 10 இடங்களிலும், ஈரோட்டில் 3 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான சுமார் 69 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கணக்கில் வராத சுமார் 2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்த நிலையில், இன்று மீண்டும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.