காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் சோமசேகர் அப்பாராவ் கடந்த மே மாதம் பயிற்சிக்காக சென்றதை அடுத்து ஆட்சியர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டவர் புதிய ஆட்சியராக ரவி பிரகாஷ் நியமிக்கப்பட்டு இருந்தார்.

நியமிக்கப்பட்ட போது விடுமுறை இருந்ததால் மூன்று மாதத்திற்கு பிறகு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய ஆட்சியராக ரவி பிரகாஷ் ஐ ஏ எஸ் பதவி ஏற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் காரைக்காலில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்து வைத்துள்ளேன் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் அதிகாரிகளிடம் பொதுமக்கள் பிரச்சினை என்று வரும்போது அதிகாரிகளே ஒரு பிரச்சினையாக இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார் மேலும் முன்பிருந்த ஆட்சியர் செய்து வந்த நல்ல திட்டங்களை தொடரப்படும் என்றார். பொதுமக்கள் எந்நேரமும் கலெக்டரை சந்திக்கலாம் என்று புதிய மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.