தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், நாளை தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக நாளை தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் செயல்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,
தமிழகத்தில் 24,610 முழுநேர ரேஷன் கடைகள், 10,164 பகுதி நேர கடைகள் என மொத்தம் 34,774 ரேஷன் கடைகளில் குடிமைப் பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் அத்தியாவசிய பொருட்களைப் பெற்று வருகின்ற தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாளை ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும்




