மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், வாவிடைமருதூர் கிராமத்தில், புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க
தமிழ்செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில், சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மாவட்ட இணை பதிவாளர் குருமூர்த்தி, திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஊராட்சிமன்றத் தலைவர் திருநாவுக்கரசு, 15.பி.மேட்டுப்பட்டிதொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயளாலர் துரைசிங்கம், வாவிடைமருதூர் கார்த்திக், ஒன்றியப் பொருளாளர் சுந்தர், நிர்வாகிகள் தனுஷ்கோடி, பிரதாப், சந்தனகருப்பு, தவசதீஸ், ராகுல், பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர் அருகே ரேசன் கடை திறப்பு-எம்.பி.
