• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – 4பேர் கைது

Byகுமார்

Jul 7, 2022

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 4லட்ச மதிப்பிலான நகைகள் மோசடி – இளைஞர் உள்ளிட்ட 4பேர் போக்சோ மற்றும் மோசடி வழக்கில் கைது – நகைகள் மீட்பு.
மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் மதுரை கோ.புதூர் பகுதியை சேர்ந்த சபீர் அகமது என்பவருடைய மகன் பயாஸ்கான் என்பவரது இன்ஸ்டாகிராம் மூலமாக நண்பராக பழகிவந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சிறுமியை காதலிப்பதாக கூறி அவ்வப்போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியுள்ளார். மேலும் மோசடி வார்த்தைகளை கூறி சிறுமியிடம் இருந்து அவ்வப்போது பணத்தை ஏமாற்றிவாங்கியுள்ளனர்.

மேலும் ஆடைகள் மற்றும் படிப்பு செலவிற்கு பணம் தேவை என சிறுமியிடம் நைசாக பேசிய இளைஞர் பயாஸ்கான் சிறுமியின் வீட்டில் இருக்கும் 10பவுன் தங்க நகையை எடுத்துவருமாறு வற்புறுத்தியுள்ளார்.இதனையடுத்து வீட்டிற்கு தெரியாமல் 10பவுன் செயினை சிறுமி எடுத்துவந்த நிலையில் பயாஸ்கானின் நண்பர்களான புதூரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் சரவணக்குமார் ஆகியோர்கள் உதவியோடு சரவணக்குமாரின் தாயார் முத்துலெட்சுமி என்பவர் மதுரை கோ.புதூர் பகுதியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் நகையை 2லட்சத்தி 70ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளனர்.
அந்த பணத்தில் பயாஸ்கான் ரூ.1லட்சத்தி 70ஆயிரம் ரூபாயும் , அவனது நண்பர்கள் சதீஷ் 20ஆயிரமும், சரவணக்குமார் 30ஆயிரம் ரூபாயையும், சரவணக்குமாரின் தாயார் முத்துலெட்சுமி 50ஆயிரம் ரூபாயையும் பங்குபோட்டுக் கொண்டுள்ளனர். இதனையடுத்து தனது மகளை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், 4லட்சம் ரூபாய் நகையை அடகுவைத்து மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி சிறுமியின் தாயார் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சிறுமியை பாலியல் தொந்தரவு அளித்த ஏமாற்றியதாக கோ.புதூரைச் சேர்ந்த பயாஸ்கான் அவரது நண்பர்கள் சதீஷ், சரவணக்குமார் மற்றும் சரவணக்குமாரின் தாயார் முத்துலெட்சுமி ஆகிய 4பேரை கைது செய்த நிலையில் பயாஸ்கான் மீது போக்சோ சட்டத்தின் கீழும் மற்றும் 3பேர் மீது மோசடி வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 லட்சம் மதிப்பிலான 10 பவுன் தங்க நகையையும் பறிமுதல் செய்தனர்.
சிறுமியை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த நகையை மீட்ட தல்லாகுளம் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினருக்கு காவல்துறை ஆணையர் செந்தில்குமார் பாராட்டு தெரிவித்தார்.