• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இளம்பெண் கற்பழித்து கொலையா? கடையநல்லூர் காவல் நிலையம் தூங்குகிறதா!!!!!

ByIlaMurugesan

Jul 18, 2022

கடைநல்லூர் காவல் நிலையம் பகுதியில் இளம் பெண் அழுகிய நிலையில் கை,மண்டை ஓடு கிடைத்திருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட மங்களாபுரம் – வேலாயுதபுரம் சாலையில் அச்சம்பட்டியை சார்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. சண்முகம் கடந்த நான்கு நாட்களுக்கு முன் தோப்புக்கு சென்ற போது மனித உடலில் உள்ள கை ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை கண்டு கம்பனேரி புதுக்குடி 2 கிராம நிர்வாக அலுவலர் ராமச்சள் திரனுக்கு தகவல் அளித்தார் கிராம நிர்வாக அலுவலர் இது குறித்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவலர் விஜயகுமார் உதவி ஆய்வாளர் கனகராஜன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கையை கைப்பற்றினர்.


அது ஒரு இளம் பெண்ணின் வலது கை எனவும் அழுகிய நிலையில் இருப்பதை கண்டறிந்தனர். இது குறித்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜுக் கு தகவல் தெரிவிக்க புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் விசாரிக்க உத்தரவிட்டார். புளியங்குடி துணை கண்காணிப்பாளர் கணேஷ் உத்தரவின் பேரில் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கனகராஜன் மற்றும் தனிப்பிரிவு காவலர் உட்பட பலர் அப்பகுதியில் டிரோன் கேமரா மூல ம் தோப்பு மற்றும் சுற்றுப்புறங் களில் தேடி வந்தனர். பறக்கும் கேமரா மூலம் உடல் மற்றும் மண்டை ஓடு முட்புதரில் கிடப்பதை கண்டுபிடித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் தடயவியல் துறையினர் எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு ஆகியவற்றை சேகரித்து கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். முட்புதரில் எலும்பு கூடாக கிடந்த இளம் பெண்ணுக்கு 25 முதல் 30வயதுக்குள் இருக்கலாம் எனவும் அவர் அணிந்திருந்த புளு கலர் லெக்கின்ஸ் பேண்ட் பச்சை நிறத்தில் டிசைன் போட்ட சுடி தாரையும் கண்டுபிடித்தனர்.

மேலும் இளம் பெண்ணின் வலது கை முதலிலும் அதனை தொடர்ந்து முட்புதருக்குள் உடலும் கிடந்ததை பார்த்தால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் காதல் வலையில் விழுந்து காதலனோடு வந்து தோப்புக்குள் உல்லாசமாக இருந்த போது யாராவது பார்த்து இந்த செய்வில் ஈடுபட் டார்களா அல்லது விலைமாதராக இருந்து நான்கைந்து பேர் அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபட்டு பணம் கொ டுப்பதில் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மூலம் கடையந ல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காணமற் போனவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில் நகரில் பெரும் பரபரப்பை . ஏற்படுத்தி வருகிறது.
இச்சம்பவத்தில் அழுகிய நிலையில் கையும், மண்டை ஓடும்,எலும்புகளுக்கும் கிடைத்திருக்கும் நிலையில் சம்பவம் நடந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கும் என்பது தெரிகிறது. ஆனால் இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் காவல் நிலையம் மெத்தனமாக இருப்பதை காட்டுகிறது. பெண்களுக்கு இப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாக சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை மெத்தனமாக இருந்த காவல்துறை இனியாவது விரைந்து நடவடிக்கை எடுக்குமா?