• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குரூப் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம். தேனி எம்பி பாராட்டு…

குரூப் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த தேனி மாவட்டம் கம்பம் மாணவியை தேனி பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தேனி மாவட்டம் கம்பம் நகரை சேர்ந்தவர் நபிலா. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது. இவர் அரசு பணியாளர்கள் தேர்வுகள் எழுதுவதற்கு பயிற்சி பெற்று தேர்வுகளை எழுதி வந்துள்ளார். கடந்த வருடம் நடந்து முடிந்த குரூப்-1 தேர்வில் இந்திய அளவில் 27 வது இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் குரூப் 2 தேர்வில் தமிழக அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் நபிலா. இதனைத் தொடர்ந்து, இவருக்கு அரசு பணி வழங்குவதற்கு ஆணை பிறப்பித்து வணிகவரித்துறையில் துணை ஆணையாளராக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் சாதனை பெண்மணியை பாராட்டும் வண்ணமாக தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவரது இல்லத்துக்கு சென்று நபிலாவின் தாய், தந்தையை சந்தித்து சாதனை படைத்த பெண்மணிக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்துகளையும் தெரிவித்தார். தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு சாதனைகள் புரிந்திடவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது கட்சியினர் பலர் அவருடன் இருந்தனர்.