தேனி மாவட்டம் சின்னமனூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நகர மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு தொடங்கி வைத்து, முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது முகாமில் நடைபெறும் திட்டங்களுக்கு பொதுமக்கள் எவ்வாறு அணுகுகின்றனர், அதற்கு அதிகாரிகள் எவ்வாறு உதவி செய்கின்றனர் என்பது போன்ற விஷயங்களை கேட்டு அறிந்து கொண்டார்.
மேலும் இந்த முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் என மக்களிடம் கூறிச் சென்றார்.

இந்த ஆய்வின்போது உத்தமபாளையம் கோட்டாட்சியர், உத்தமபாளையம் வட்டாட்சியர் ஆகியோர் உடன் இருந்தனர். இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் வருகைதந்து தங்களின் மனுக்களை அளித்தனர்.