தமிழ்நாடு அரசு இன்று 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த சஜீவனா அரசு கூடுதல் செயலாளர், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சேலம் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ரஞ்சித் சிங் அவர்கள் தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ரஞ்ஜீத் சிங் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். குன்னூர், நாகப்பட்டினத்தில் பணியாற்றியவர். கால்நடை பராமரிப்புத் துறையின் துணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த ஜூலை 2024 ல் நாகப்பட்டினம் கூடுதல் ஆட்சியராக இருந்த ரஞ்ஜீத் சிங் சேலம் மாநகராட்சியின் 25-வது ஆணையாளராக இருந்தவர். தற்போது தேனி மாவட்டத்தின் 19-வது புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய தேனி ஆட்சியராக ரஞ்ஜித் சிங் நியமனம்…
