• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராணி வேலு நாச்சியார்294-வது பிறந்த நாள் விழா..! சிவகங்கை MLA, ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை..,

ByG.Suresh

Jan 3, 2024

ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய சுதந்திர போரை தொடங்கி வெற்றி கண்டவர் ராணி வேலுநாச்சியார். இவருக்கு தமிழக அரசின் சார்பில் சிவகங்கை பையூர் பகுதியில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அரசு விழாவாகவும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ராணி வேலு நாச்சியாரின் 294-வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ராணி வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர்.
பெரிய கருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் சிவகங்கை சட்டமன்ற அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன், அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள், சேவியர்ராஜ், கருணாகரன், அருள் ஸ்டீபன், செல்வமணி, , நகரச்செயலாளர் ராஜா மற்றும் காங்கிரஸ், பாஜக , விஜய் முன்னணி இயக்கம், ஓபிஎஸ் அணியினர் என ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சண்முக சுந்தரம் உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ராஜ செல்வன் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.