பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கூலிதொழிலாளி ராணி. இவர் பெரம்பலூர் நான்கு ரோட்டில் உள்ள RBL என்ற தனியார் வங்கியில் ரூ.50,000 கடன் வாங்கி தொடர்ந்து நான்கு மாதங்கள் தவணை கட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாத தவணை பணம் கட்டாததால் வங்கி ஊழியர் சரவணன் என்பவர் ராணியின் வீட்டுக்கு வந்து ராணியின் செல்போனை பிடுங்கி கொண்டு ஜூலை மாத தவணை கட்டிய பிறகு செல்போனை கொடுப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.
நேற்று ஆகஸ்ட் மாதத்திற்கான தவணை பணம் கட்ட வேண்டிய தேதி என்பதால் காலை ராணி வீட்டிற்கு வங்கி ஊழியர் சரவணன் சென்றுள்ளார். ராணி வீட்டிற்கு வந்த சரவணன் ராணியிடம் இந்த மாத தவணை கட்ட வேண்டும் என பணம் கேட்டுள்ளார்.
ராணி இன்று மாலை பணம் கட்டி விடுவேன் என்று சொன்னதாகவும், மீண்டும் நேற்று மதியம் 2 மணி அளவில் சரவணன் சென்று பணம் கட்ட சொல்லி ஆபாச வார்த்தைகள் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் அடைந்த ராணி நேற்று இரவு தனது வீட்டில் சேலையால் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கியுள்ளார்.
.இதனை பார்த்த அருகில் உள்ள உறவினர்கள் ராணியை தூக்கில் இருந்து இறக்கி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ராணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சடைந்த உறவினர்கள் உடனடியாக பெரம்பலூர் காவல் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கி ஊழியர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக 306 வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை பெரம்பலூர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.