• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

கோவையில் ரம்ஜான் பிறை பார்க்கும் நிகழ்வு…

BySeenu

Feb 19, 2026

கோவையில் ரம்ஜான் பிறை பார்க்கும் நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் பிறை பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் தெற்கு கல்லாமேடு பகுதியில் உள்ள ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமா அத் மற்றும் மத்ரஸா பள்ளிவாசலில் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில் பிறை பார்க்கும் நிகழ்வு அந்த பள்ளிவாசலின் தலைவர் ஹாஜி இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹாஜி ஏஆர் பஷீர் அகமத் முன்னிலை வகித்தார். நேற்று பிறை பார்க்கப்பட்டது தொடர்ந்து இன்று முதல் அவர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிப்பார்கள்.

இந்த பிறை பார்க்கும் நிகழ்வில் ஐக்கிய ஜமாத் சட்ட ஆலோசகர் அட்லகேட் ஹனிபா, லாலி ரோடு பள்ளிவாசலை சேர்ந்த அப்துல் ரஹ்மான் போத்தனூர் மஸ்ஜிதுல் ஜின்னாவை சேர்ந்த அமீர் அலி ஆத்துப்பாலம் பள்ளிவாசலை சேர்ந்த பாரூக் சிங்காநல்லூர் பள்ளிவாசலை சேர்ந்த ஜலில் உட்பட ஹைதர் அலி, முத்தவல்லி, சி.கே முகமது அலி, துணை தலைவர் பாட்ஷா, துணைச் செயலாளர், அக்பர் பாஷா, பொருளாளர், ஷாஜகான், ஆடிட்டர் எம். ஐ .காதர். கமிட்டி உறுப்பினர்கள், வி ஹெச் முகமது அலி, பூ .முஸ்தபா, அப்துல் ரஷீத், அலாவுதீன், தாஜுதீன், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.