• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

Byவிஷா

May 30, 2023

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தரம் தற்போது உயர்ந்து காணப்படுகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்கின்றனர். அது மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கு இணையாக கணினி, ஆய்வகம், நூலகம் என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அரசு பள்ளிகளில் பயின்று பயனடைந்து வருகின்றனர்.
அரசு பள்ளிகளின் தரம் மேம்பாட்டை பார்த்து பல்வேறு தரப்பினரும் தங்களது குழந்தைகளை பள்ளியில் அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வத்துடன் முன் வருவதை இந்த ஆண்டு பார்க்க முடிகிறது. நடப்பாண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பேரணி நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இரண்டு வாரங்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.