• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரணி

ByG.Suresh

Jun 14, 2024

சிவகங்கை மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர் பேரணியினை ஆட்சியர் வளாகத்திலிருந்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மேலூர் ரோட்டில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இந்த பேரணியில் சுற்றுச்சூழலை வலியுறுத்தி பதாதைகளும் ஏந்திச்சென்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராசன், உதவி பொறியாளர் ராஜராஜேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நடேசன் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் – முனைவர்.‌ ஜெய பிரகாஷ் , முதலமைச்சரின் பசுமை தோழர் – செல்வி கோ. அபிநயா
நிஷா வாய்ஸ் டிரஸ்ட் நிறுவனர் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாட்டர்பாட்டில், பிஸ்கட் உடன் மஞ்சப்பை வழங்கப்பட்டது.