• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

ராஜ்ஜிய சபா உறுப்பினர் தர்மர் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பு…

ByKalamegam Viswanathan

Nov 6, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் விரகனூரில் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் சாலை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளானர்.

இது குறித்து டீச்சர்ஸ் காலனி பொதுமக்களின் கோரிக்கையை ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபராஜனிடம் சாலை அமைக்க கூறினார்கள் .

இதனை அடுத்து ராஜ்யசபா உறுப்பினர் தர்மர் நிதி உதவியின் பெயரில் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திப ராஜன் பரிந்துரையின்படி, ஒரு கோடி மதிப்பிலான டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள சாலையை அமைக்கும் பணி நடைபெற்று முடிவற்றது.

இதனை தொடர்ந்து நேற்று சாலை அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபராஜன். விரகனூர் பஞ்சாயத்து டீச்சர்ஸ் காலனி வார்டு உறுப்பினர் கணேசன், பஞ்சாயத்து செயலாளர் ராஜாமணி ஆகியோர் பார்வையிட்டனர்.