• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து.. நோயாளிகள் பத்திரமாக மீட்பு

Byகாயத்ரி

Apr 27, 2022

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2-ஆவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென இன்று காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த மீட்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்கிடையே மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து என்பதால் அங்கு நோயாளிகள் யாரும் இல்லை என்று தெரிவித்தார்.அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த 32 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்..

மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் இருந்த 10 சிலிண்டர்களின் 3 சிலிண்டர்கள் வெடித்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் ஆக்சிஜன் சிலிண்டர் கசிவா? அல்லது மின் கசிவா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.