• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தனுஷ் சிபாரிசு செய்த இயக்குனருடன் நடிக்க இருக்கும் ரஜினி…மனக்கசப்பு நீங்கிவிட்டதோ..??

Byகாயத்ரி

Feb 18, 2022

நடிகர் தனுஷ் சிபாரிசு செய்த இயக்குனரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இதனால் ஐஸ்வர்யா மீது ரஜினிகாந்த் கடும் கோபத்தில் இருந்தார். ஐஸ்வர்யாவின் மீது கோபம் கொண்ட ரஜினி யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். ரஜினி தன் கவனத்தை திசை திருப்பும் வண்ணமாக திரைப்படத்தில் கவனம் செலுத்துகின்றார். முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த ரஜினி யாரும் எதிர்பார்க்காத நிலையில் இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமாரிடம் கதையை கேட்டு உள்ளார். அவரின் கதை பிடித்து அவரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். நெல்சன் திலீப்குமார் இதுவரை 3 படங்களை இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வந்த மூன்று படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கின்றார். இந்நிலையில் ரஜினியின் பாலிவுட் திரைப்படத்தை இயக்குனர் பால்கி இயக்குகின்றார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து ரஜினிக்கு இயக்குனர் பால்கி கதை சொல்ல தனுஷ் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது. தனுஷ் சிபாரிசு செய்த இயக்குனரை ரஜினி ரிஜெக்ட் செய்ததாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது தனுஷ் சிபாரிசு செய்த இயக்குனர் பால்கியின் இயக்கத்தில் ரஜினி 170 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இச்செய்தியைக் கேட்ட ரசிகர்கள் ரஜினிக்கும் தனுசுக்கும் மனக்கசப்புகள் நீங்கி இணைந்து விட்டார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.