• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தெனாவட்டு சௌந்தர்யா மனஉளைச்சலில் ரஜினி

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம்வருபவர் ரஜினிகாந்த் இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தந்தையைப் போல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு இயக்குனராக அவதாரம் எடுத்தனர்.ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். அதேபோல் சவுந்தர்யா ரஜினியை வைத்து கோச்சடையானும், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி -2 படமும் இயக்கினார். ஆனால் இருவருக்கும் எதிர்பர்த்த வெற்றி கிட்டவில்லை.

சினிமா நமக்கு செட்டாகாது என்று நடிகர் தனுஷை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்துதிருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா. இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். அதேபோல் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, கடந்த 2010-ம் ஆண்டு அஸ்வின் என்பவரை மணந்தார்.

இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ள நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் அஸ்வினை விவாகரத்து செய்தார் சவுந்தர்யா. மகளின் இந்த முடிவு ரஜினிக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. பின்னர் அதிலிருந்து மீளவே அவருக்கு சில மாதங்கள் ஆனது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு விசாகன் என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார் சவுந்தர்யா.

இந்நிலையில், நேற்று ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது விவாகரத்து முடிவை திடீரென அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். மகளின் இந்த முடிவால் ரஜினி கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இந்த சமயத்தில் தனது அக்காவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சவுந்தர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சவுந்தர்யாவையும், ஐஸ்வர்யாவையும் ரஜினி தூக்கியபடி இருக்கிறார். என்ன நடந்தாலும் எங்களுக்கு எங்க அப்பா இருக்கார் என்பதை அந்த பதிவு மூலம் சூசகமாக சொல்லி இருக்கிறார் சவுந்தர்யா.