கேரளா மாநிலம் அட்டப்பாடியில் ரஜினி கண்ட ரசிகர் ஒருவர் கற்பூரத்தை கையில் ஏந்தி தெய்வமே என ஆரத்தி எடுத்த செல்போன் வீடியோ காட்சிகள் வைரலாகின.
தமிழக கேரள எல்லையான அட்டப்பாடியில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்லர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அங்கு உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகின்றார். ரஜினிகாந்தை பார்ப்பதற்கு காலை, மாலை என இரு வேலைகளிலும் ரசிகர்கள் தங்கி இருக்கக் கூடிய ரிசார்ட் முன்பாக கூடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை சூட்டிங் கிளம்பிய ரஜினியை பார்த்த ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி காண்பித்து கும்பிடு போட்டார்.
இதனை தொடர்ந்து ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கை அசைத்து விட்டு அங்கு இருந்து சூட்டிங் கிளம்பி சென்றார். தற்போது இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.