ராஜாவூர் காணிக்கை மாதா கோயில் கொடியேற்றம். 10_நாட்கள் விழா தொடரும்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லைகளாக உள்ள ஆரல்வாய்மொழி முதல் களியக்காவிளை உட்பட்ட நகர்ப்புறங்கள், 47_மீனவ கிராமங்களில் வான் தொடும் உயர கோபுரங்களில் சிலுவை தாங்கிய கிறிஸ்தவ தேவாலயங்கள் கிட்ட தட்ட 450_க்கு அதிகமாக குமரி மாவட்டத்தில் உள்ளது.
குமரியில் உள்ள தேவாலையங்களில் குறிப்பிட்டவை பல்நிலை சிறப்பு பெற்றுள்ளது.
குமரி மாவட்ட அரசு போக்குவரத்து துறை ஒவ்வொரு சனிக்கிழமையும், காலை முதல் இரவு வரை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இராஜாவூரில் உள்ள புனித மைக்கேல் அதி தூதர் தேவாலையம் கிறிஸ்தவர்கள் மட்டுமே அல்லாது பிற மதத்தவர்களும் சென்று வழிபடுதல் காலம் காலமாக தொடர்கிறது.
இராஜாவூர் பகுதியில் இருக்கும் மைக்கேல் அதி தூதர் ஆலையம், புனித காணிக்கை மாதா என்ற இரண்டு ஆலையங்களும், புனித லூர்து கெபியும் பக்தர்கள் மத்தியில் மதம் கடந்த வழிபாட்டு ஸ்தலங்களாக உள்ளது பன்னெடும் காலமாக, இராஜாவூர் வடக்கு ஊர், தெற்கு ஊர் என இரண்டு பகுதிகளில் இரண்டு தேவாலயங்கள் உள்ளது.
இராஜவூரின் வடக்கு ஊர் பகுதியில் காணிக்கை மாதா தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா இன்று(ஜனவரி24)ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் 10 நாட்கள் தொடர்கிறது.
