விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருள்மிகு புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி சித்திரை திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் வீதி உலா நடைபெறும் பத்தாம் நாள் திருவிழா இன்று இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வழக்கம். அப்படி வரக்கூடிய பக்தர்களுக்கு விருதுநகர் மாவட்ட சாலையோர சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு 3000 பேருக்கு அன்னதான வழங்கப்பட்டது.
இந்த அன்னதானத்தை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் துவங்கி வைத்தனர். அன்னதான ஏற்பாடுகளை தலைவர் பத்மநாபன் செயலாளர் கணேசன் பொருளாளர் காதர் மைதீன் சட்ட ஆலோசனை தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.