

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான இந்த கோவில் பரசுராமரால் கட்டப்பட்டது என்பது வரலாறு.
இந்த ஊருக்கு கன்னியாகுமரி என பொய்யர் அமைத்தது, கன்னி பகவதியம்மன் கோயிலே காரணம். பல முறை பகவதியம்மன் கோவிலுக்கு கோபுரம் கட்ட வோண்டும என்ற முயற்சி நடைபெற்ற போதெல்லாம் ஏதாவது ஒருவகையில் தடைப்பட்டு போன வரிசையில் ஒரு முறை அஸ்திவாரம் வரை நடந்த பணி ஏதோ பிரச்சினையால் தடை பட்டு போனது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படத திருக்கோவிலில் அறங்காவலர் குழு பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டது.
நீண்ட கால முயற்சியில் தடை பட்டு போன ராஜகோபுரம் பணியை மீண்டும் தொடங்கலாமா என கடந்த (செப்டம்பர்_17)ம்தேதி தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டதில். பகவதி அம்மன் கோயிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்ட உத்தரவு கிடைத்ததாம்.

ராஜகோபுர பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக கணபதி ஹோமமும்,மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும். மூலஸ்தானமாக விளங்கும், கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள 24-வது சக்தி பீடமான பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்தி விட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்கவேண்டும். சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்கலாம் என்பதுவும் தேவபிரசன்னத்தில் தெரிய வந்தது.
இதற்கான கணபதி ஹோமம் இன்று (செப்டம்பர்_22)ம் நாள் அதிகாலை பகவதி அம்மன் கோயில் சுற்றுபிரபகாரம் பகுதியில் நடந்து முடிந்தது. ராஜகோபுரம் 9 அடுக்குகள் கொண்ட நிலையுடன்,120 அடி உயரத்திலும்,60 அடி நீளத்திலும்,40அடி அகலத்திலும் கட்டப்பட உள்ளது.

ராஜகோபுரத்தின் மாதிரி வரைபடத்தை குமரி மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவர் ராமகிருஷ்ணனிடம், அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் ராஜகோபுரம் முழுக்க, முழுக்க பக்த்தர்களின் நன்கொடையாலே கட்ட இருப்பதாகவும், ராஜகோபுரத்தின் முழுமையான பணிக்கு இப்போது ரூ.8 கோடி செலவாகும் என நிதி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாம்.


