• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ரயில் தண்டவாளங்களில் மழைநீர்…மாற்று பாதையில் ரயில் இயக்கம்

Byகாயத்ரி

Nov 27, 2021

தென்மாவட்டங்களில் நேற்று முன்தினம் கொட்டித் தீர்த்த மழை தூத்துக்குடி மாவட்டத்தை அதிகம் பாதித்தது. தூத்துக்குடியில் மட்டுமே 266 மிமீ மழை பெய்த நிலையில், அங்குள்ள ரயில் நிலைய தண்டவாளங்கள் மழைநீரில் மிதக்கின்றன.

இதன் காரணமாக நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் மிக தாமதமாக புறப்பட்டு சென்றன.


இந்நிலையில் நேற்றும் தூத்துக்குடி ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.அதன்படி நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பாசஞ்சர் சிறப்பு ரயில் நேற்று இரு மார்க்கத்திலும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி- மைசூர் எக்ஸ்பிரஸ், இரவு 8.15 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி- சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய இரு எக்ஸ்பிரஸ்களும் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன.மைசூர் எக்ஸ்பிரஸ் மேலூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என பின்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் 2 மணி நேரத்திற்கு மேலாகியும் வராமல் பயணிகள் காத்து கிடந்தனர். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.