• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

ByA.Tamilselvan

Oct 19, 2022

கேரளாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரளாவில் ஆலப்புழா, பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற 22-ந்தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. இதையடுத்து இந்த 9 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஆற்றில் குளிக்கும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.