• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் தர்ணா போராட்டம்..!

சேலத்தில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தென்னக ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையில் உள்ள கட்டுமான பணிகள் அனைத்தையும் ஒப்பந்தங்கள் விடப்பட்டு ஒப்பந்ததாரர்கள் மூலமாக திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஏராளமான திட்டப்பணிகளை சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்கள் உட்பட ரயில்வே துறைக்கு சொந்தமான அனைத்து கட்டிட பணிகளை ஒப்பந்ததாரர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் இந்தியாவில் சிமெண்ட் மற்றும் ஸ்டீல் ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் போன்றே டீசல் விலையும் அதிகரித்து வருகிறது. இது ரயில்வே துறையில் 50 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை ஒப்பந்த புள்ளிகள் பெற்று பணிகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அகில இந்திய கட்டுமான சங்கத்தின் தலைமையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பாக மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.


சேலம் கோட்ட சங்கத்தின் தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் கண்ணன் சந்திர மூர்த்தி ஒருங்கிணைப்பாளர் அன்புக்கரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.